ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் கசிந்ததாக கூறப்படும் பகுதி ஒன்றில் உள்ள மூன்று வினாக்களுக்கு அனைத்து மாணவர்களுக்கும் இலவச புள்ளிகளை வழங்குவதற்கு அமைச்சரவை பரிந்துரைத்துள்ளதாக உயர் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை இன்று (02) சட்டமா அதிபர் உயர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.
இந்த பரீட்சையை மீண்டும் நடாத்துவது பொருத்தமற்றது என அமைச்சரவை பரிந்துரைத்துள்ளதாகவும், இதனால் மாணவர்கள் பாதிக்கப்படலாம் எனவும் சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்பட்ட விதத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் இன்று மீள அழைக்கப்பட்ட போதே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனுக்களை முழு உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் விசாரிக்குமாறு கோரி சட்டமா அதிபர் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாகவும் சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து, மனு மீதான விசாரணையை டிசம்பர் 11 ஆம் திகதி நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment