ரயில் நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (17) இரவு இயக்கப்படவிருந்த இரவு நேர தபால் ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, 8 தபால் ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு - பதுளை, மட்டக்களப்பு - கொழும்பு, திருகோணமலை - கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் - கொழும்பு ஆகிய ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் நேற்று (17) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ள நிலையில், இன்று நள்ளிரவுடன் அது முடிவடையவுள்ளது.
பணிப்புறக்கணிப்பு காரணமாக, ரயில்வே திணைக்களத்தால் இன்று காலை பல ரயில் சேவைகளை இரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இன்று நள்ளிரவுடன் பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு வந்தாலும், தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்று ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.
No comments:
Post a Comment