ஓட்டமாவடி மாணவன் நீரில் மூழ்கி மரணம் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 18, 2025

ஓட்டமாவடி மாணவன் நீரில் மூழ்கி மரணம்

பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று (18) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்தியாற்றுப் பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.

நண்பர்களுடன் சேர்ந்து சந்தியாற்று நீரோடையில் குளித்துக் கொண்டிருக்கும்போதே மாணவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

இவ்வாறு மரணமடைந்தவர் ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் உயர்தரத்தில் கணிதப் பிரிவில் கல்வி கற்று வரும் ஓட்டமாவடி பி.எஸ்.குறுக்கு வீதியில் வசித்து வரும் முகம்மது அலிகான் அஸ்லூன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எச்.எம்.எம்.பர்ஸான்

No comments:

Post a Comment