பாடசாலைகளில் பாலியல் துஷ்பிரயோகம் : முறையிட அழையுங்கள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 14, 2025

பாடசாலைகளில் பாலியல் துஷ்பிரயோகம் : முறையிட அழையுங்கள்

பாடசாலைகளில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் முறையிடுவதற்கு 1929 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த அவசர தொலைபேசி இலக்கம் 24 மணி நேரமும் சேவையில் இருக்கும்.

எனவே, பாடசாலைகளில் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றால் பாடசாலை அதிபர்கள் அல்லது பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவ, மாணவிகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு முறைப்பாடு அளிக்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

பாடசாலைகளில் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ncpa@childprotection.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் முறைப்பாடு அளிக்க முடியும்.

அத்துடன் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அலுவலகத்திற்கு சென்றும் (இல. 330, தலவத்துகொட வீதி, மாதிவெல, ஶ்ரீ ஜயவர்தனபுர) முறைப்பாடுகளை அளிக்க முடியும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment