கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் புதிய செயலாளராக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் முன்னாள் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.
இதேவேளை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைசுக்கு புதிய செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி பீ.கே.கோலித கமல் ஜினதாச நியமிக்கப்பட்டுள்ளார்.
அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment