நாட்டின் பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட முதல் பெண் - News View

About Us

About Us

Breaking

Friday, May 16, 2025

நாட்டின் பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட முதல் பெண்

இலங்கை வரலாற்றில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக (Commissioner general of examination) முதல் முறையாக பெண்ணொருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாட்டின் 11ஆவது பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே வியாழக்கிழமை (15) உத்தியோகபூர்வமாக கடமையேற்றார்.

2005 ஆம் ஆண்டு இலங்கை கல்வி நிர்வாக பிரிவு சேவையில் விசேட அதிகாரியான லியனகே, முன்னர் பாடசாலை பரீட்சை பிரிவு மற்றும் பரீட்சை திணைக்களத்தின் நிர்வாகம் மற்றும் விசாரணைப் பிரிவுக்கு பொறுப்பான ஆணையாளராகப் பணியாற்றியுள்ளார்.

கொழும்பு டி.எஸ். சேனநாயக்க கல்லூரியின் பிரதி அதிபர் மற்றும் அதிபர் பதவிகளையும் வகித்துள்ள புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், காலியில் உள்ள சங்கமித்த பெண்கள் வித்தியாலயத்தின் பழைய மாணவி ஆவார்.

ருஹுணு பல்கலைக்கழகத்தில் முதல் பட்டம் பெற்ற லியனகே, கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வி முதுகலைப் பட்டத்தையும், களனி பல்கலைக்கழகத்தில் மொழியியலில் கலை முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment