கொத்மலை, ரம்பொட பகுதியில வேன் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று (14) பிற்பகல் இடம்பெற்ற குறித்த விபத்து, கொத்மலை, கெரண்டிஎல்ல பகுதியில் இ.போ.ச. பஸ் விபத்துக்குள்ளான இடத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் 17 பேர் காயமடைந்து கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அநுராதபுரம் பகுதியிலிருந்து நுவரெலியா பகுதிக்கு பயணித்த வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment