பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்களுக்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - கலாநிதி அப்துல் மஜீத் - News View

About Us

Add+Banner

Wednesday, November 6, 2024

demo-image

பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்களுக்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - கலாநிதி அப்துல் மஜீத்

NW27
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்களுக்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென, தென்கிழக்கு பல்கலைக்கழக பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் தெரிவித்தார்.

2022/2023ஆம் கல்வியாண்டிற்கு தென்கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவ வர்த்தக பீடத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ள புதிய மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளுக்கான ஆரம்ப நிகழ்வு அண்மையில் பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

முகாமைத்துவ வர்த்தக பீடத்துக்கு பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை விடயத்தில் அரசாங்கம் மிகுந்த இறுக்கமான தண்டனைகளை அறிமுகம் செய்துள்ளது.

பகிடிவதையினால் நாட்டில் உயர் கல்வியில் பாரிய வீழ்ச்சியை எதிர்நோக்க வேண்டியுள்ளது. பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர்கள் கனிஷ்ட மாணவர்களுக்கு அவர்களின் கல்வி தொடர்பாக நல்ல அறிவுரைகளையும், வழிகாட்டல்களையும் வழங்க வேண்டுமே தவிர வெறுமெனே பகடிவதை என்ற போர்வையில் கல்வியை சீரழிக்கக் கூடாது.

ஆயிரக்கணக்கான மாணவர்கள் உயர்தர பரீட்சை எழுதுகின்ற போதிலும் குறைவானவர்களே பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாவதாகவும் அவ்வாறு தெரிவு செய்யப்படும் மாணவர்கள் அவர்களுக்கு கிடைத்துள்ள வரப்பிரசாதத்தை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும்.

ஒரு பட்டதாரியை உருவாக்குவதற்கு அரசாங்கம் மில்லியன்கணக்கில் செலவிடுவதாகவும் மக்களின் வரிப் பணத்தில் கல்வியைத் தொடர்கின்ற மாணவர்கள் கல்வி என்ற இலக்கை அடைந்து கொள்வதற்காய் அர்ப்பணிப்புடன் செயற்படும்.

நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு ஒரு முன்மாதிரியாக தென்கிழக்கு பல்கலைக்கழகம் திகழ்கின்றது. பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள நீங்கள் பல கனவுகளுடன் இங்கு வந்துள்ளீர்கள். பல்கலைக்கழக வளங்களைப் பயன்படுத்தி நாட்டிற்கும் சமூகத்திற்கும் பெரும் பங்காற்ற வேண்டுமென்றார்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *