யாழ்ப்பாணத்தில் ஆவா ரௌடிக்கும்பலை உருவாக்கியவர்களில் ஒருவனான பிரபல ரௌடி நல்லலிங்கம் பிரசன்னாவை, குற்ற வழக்கில் பிரான்ஸூக்கு நாடு கடத்த கனடாவின் ஒன்றாரியோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இலங்கையில் வாள் வெட்டு குற்றங்களில் ஈடுபட்ட ரௌடி பிரசன்னா, பின்னர் இலங்கையை விட்டு தப்பியோடி பிரான்ஸில் தஞ்சம் புகுந்தார். அங்கு சென்றும் திருந்தி வாழாமல், அங்கும் வாள்வெட்டு குழுவை உருவாக்கி, மற்றொரு கும்பலை சேர்ந்தவர்களை வெட்டிய குற்றத்திலேயே நாடு கடத்தப்படவுள்ளார்.
2022 ஆம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகே ஒரு போட்டி கும்பல் மீது நடந்த மிக மோசமான தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கடந்தாண்டு டொராண்டோவில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த ஆவா குழு தலைவரை நாடு கடத்த ஒன்ராறியோ நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.
டொராண்டோ தெற்கு தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரசன்னா நல்லலிங்கம், கனடாவின் நீதித்துறை அமைச்சரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் நிலையில் 30 நாட்களுக்குப் பின்னர் பிரான்சிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆவா குழுவின் தலைவர் என அறியப்படும் நல்லலிங்கம், கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி, ஆவா (AAVA) கும்பலின் நான்கு உறுப்பினர்களுக்கு ஆயுதங்களை வழங்கியுள்ளதாகவும், பின்னர் போட்டி குழுவினரின் “வாகனத்தை அடித்து நொருக்க” பரிஸின் வடக்கு புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள லா கோர்னியூவ் என்ற கம்யூனுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பிட்ட குழுவினர் இரண்டு கார்களில் நள்ளிரவு லா கோர்னியூவுக்கு சென்றுள்ளனர். நல்லலிங்கத்தின் கூட்டாளிகள் என்று கூறப்படும் நான்கு பேர், வாகனங்களில் ஒன்றிலிருந்து கத்தி மற்றும் வால்களுடன் இறங்கிய காட்சிகள் அந்த நாட்டு பாதுகாப்பு கெமரா காட்சிகளில் காணப்பட்டுள்ளன.
நல்லலிங்கத்தின் வழக்கறிஞர்கள், தமது கட்சிக்காரர் ஆவா உறுப்பினர்களுக்கு காரை நொறுக்குமாறு அறிவுறுத்தியதை ஒப்புக் கொண்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த ஆவா குழு தலைவரின் சார்பில் ஆஜாரான சட்டத்தரணிகள் தெரிவிக்கையில், அனைத்து வழக்குகளையும் போலவே, நல்லலிங்கத்தை நாடு கடத்துவது குறித்த இறுதி முடிவு கனடா நீதி அமைச்சரிடம் உள்ளது.
அவர் செயல்முறையை நிறுத்த அல்லது 30 நாட்கள் வரை மேலதிக நிபந்தனைகளை விதிக்க சமர்ப்பிப்புகளைப் பெறலாம். இந்த முடிவை ஒன்ராறியோவின் உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்யலாம். இந்த வழக்கில், மேல்முறையீட்டு நீதிமன்றம் நாடு கடத்தல் செயல்முறை குறித்து இறுதி முடிவை எடுக்கும் வரை ஒருவரை நாடு கடத்த முடியாது.
மேலும், அமைச்சரிடம் சமர்ப்பிப்புகளைச் செய்து, பிரான்சிடம் அவர் சரணடைவதைத் தடுக்க மேலும் வழிகளைப் பின்பற்ற திட்டமிட்டுள்ளளோம் என நல்லலிங்கத்தின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment