புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம் - News View

About Us

Add+Banner

Wednesday, November 15, 2023

demo-image

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம்

23-6554551998a28
தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகளே, வெளியிடப்பட உள்ளன. 

பெறுபேறு பட்டியலிடும் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்முறை தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சைக்காக 3,37,591 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்களுக்கென சுமார் 2,888 பரீட்சை நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன .

அடுத்த வாரமளவில் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *