முன் பிணை கோரி முன்னாள் அமைச்சர் மனுதாக்கல் : வலை வீசி தேடும் குற்றப் புலனாய்வு பிரிவினர் - News View

About Us

About Us

Breaking

Monday, July 14, 2025

முன் பிணை கோரி முன்னாள் அமைச்சர் மனுதாக்கல் : வலை வீசி தேடும் குற்றப் புலனாய்வு பிரிவினர்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தன்னை கைது செய்வதற்கு முன்னதாக, முன் பிணையில் விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன் பிணை கோரிக்கை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு மனு அனுப்ப உத்தரவிட்டார்.

இதன்படி, 18ஆம் திகதி நீதிமன்றத்தில் வழக்கு தொடருமாறு கேட்டுக் கொண்டார்.

கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட மணல் அகழ்வு தொழிற்பாடுகளை சட்டத்துக்கு முரணாக வெளிநாட்டு நிறுவனத்துக்கு வழங்கிய விவகாரம் தொடர்பிலேயே ராஜித தேடப்பட்டு வருகிறார்.

இது தொடர்பில் நடைபெறும் வழக்கு விசாரணைகளில் இதுவரை அவர் ஆஜராகவில்லை. இதையடுத்தே அவரைக் கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment