மறைந்த நடிகை சரோஜா தேவியின் கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளது. அவை இரு குழந்தைகளுக்கு பொருத்தப்பட உள்ளது.
இந்திய திரையுலகின் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி தனது 87 ஆவது வயதில் நேற்று (14) காலமானார். சுகவீனமுற்றிருந்த இவர், பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
இவருடைய மறைவு திரையுலகத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னட திரையுலகில் அறிமுகமான சரோஜா தேவி, முதல் படதிலேயே தேசிய விருதை பெற்றுக் கொண்டார். பின்னர், 1958 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடித்த நாடோடி மன்னன் படத்தின் மூலம் தமில் திரையுலகில் அறிமுகமானார்.
அன்பே வா, ஆசைமுகம், ஆலயமணி, பார்த்திபன் கனவு, கல்யாணபாரிசு, எங்கள் வீட்டுப் பிள்ளை என தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து உச்ச நட்சத்திர அந்தஸ்துக்கு சரோஜா தேவி உயர்ந்தார்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 200 இற்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மபூஷண், பத்மஸ்ரீ விருதுகளையும் சரோஜா தேவி பெற்றுள்ளார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மறைந்த நடிகை சரோஜா தேவியின் கண்கள் இன்றையதினம் (15) 2 குழந்தைகளுக்கு பொருத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment