தரக்குறைவான மருந்தை இறக்குமதி செய்தோரை கைது செய்யுமாறு உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 15, 2023

தரக்குறைவான மருந்தை இறக்குமதி செய்தோரை கைது செய்யுமாறு உத்தரவு

நாட்டுக்குள் தரக்குறைவான இமுனோகுளோபுலின் (Immunoglobulins) ஊசி மருந்தை இறக்குமதி செய்தமை தொடர்பில், அரசாங்கத்தின் வழமையான நடைமுறைகளை மீறிச் செயற்படும் சுகாதார அமைச்சின் பொறுப்பான அதிகாரிகள் அனைவரையும் கைது செய்யுமாறு மாளிகாகந்த மஜிஸ்திரேட் லோச்சனா அபேவிக்கிரம நேற்று (15 ஆம் திகதி) உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளை தயாரித்ததாக கூறப்படும் நிறுவனத்தின் உரிமையாளர் ஜானக பெர்னாண்டோவை எதிர்வரும் (29) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இத்தடுப்பூசிகளுக்கு சீல் வைக்கப்பட்டமைக்கான காரணம் மற்றும் தடுப்பூசிகளின் நிலை தொடர்பில் நீதிமன்றத்துக்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கும் இன்று முதல் ஒரு வார காலத்துக்குள் அறிக்கை அனுப்புமாறு மருந்துப் பொருட்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி டொக்டர் விஜித் குணசேக்கரவுக்கு அழைப்பாணை விடுத்துள்ளார்.

இதற்கு முன்னர் வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுக்கமைய செயற்படாமல் வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாகக் கருதுவதாக நீதவான் குறிப்பிட்டார்.

டொக்டர் விஜித் குணசேகர நீதிமன்றம் கோரிய அறிக்கையை நேற்று வெளியிடாமையால் விசாரணைகளில் தாமதம் ஏற்பட்டதாகவும் வைத்தியர் விஜித் குணசேகரவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்குமாறும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம, சட்டமா அதிபர் சார்பில் விடயங்களை தெரிவித்து நீதிமன்றில் கோரினார். 

முதல்நாள் அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு தினம் ஒன்றை குறிப்பிடாததால் அழைப்பாணை மாத்திரமே வழங்கப்படுமென நீதவான் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் சந்தேக நபர்களின் கொடுக்கல் வாங்கல்களை செய்துள்ள சகலரின் தொலைபேசி பதிவு அறிக்கைகளைப் பெற்று ஆராயுமாறும் குறிப்பாக வாட்ஸ்அப் பதிவுகளை உரிய முறைகள் மூலம் சரிபார்க்கவும் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

அரசாங்கத்தின் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம, சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றில் நீண்ட விளக்கமளிக்கையில், 900 தடுப்பூசி குப்பிகளுக்கு முறையான நடைமுறையைப் பின்பற்றாமல் 44 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக செலுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். 

பணம் செலுத்துவதில் இத்தடுப்பூசியின் 3,985 குப்பிகள் டெண்டரின் ஊடாக கோரப்பட்டு கடுமையான நரம்பியல் கோளாறுகளுள்ள நோயாளிகளுக்கு வழங்கப்பட்டதாகவும் நான்கு நோயாளர்கள் பாதிப்புக்குள்ளாகியிருப்பது விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.

“இதில் 1,000 தடுப்பூசிகள் தடை செய்யப்பட்டுள்ளன. சந்தேகநபரின் கணக்கில் 900 குப்பிகளுக்கு பணம் வரவு வைக்கப்பட்டதையடுத்து, சந்தேகநபர் 67,000 ரூபாவை மாத்திரம் கணக்கில் வைத்துவிட்டு சகல பணத்தையும் பெற்றுக் கொண்டதாக அவர் நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.

கடந்த ஜனவரி மாதம் 04 ஆம் திகதி சந்தேகநபர் 7,500 தடுப்பூசி குப்பிகளை இறக்குமதி செய்யுமாறு கோரியதாகவும், ஆனால் 22,500 தடுப்பூசிகளை வழங்கவே அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கிரிஹாகம தெரிவித்துள்ளார்.

44 மில்லியன் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும், இது பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்றும் அவர் கூறினார். 

“இந்தியாவிலிருந்து மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதாக சந்தேகநபர் கூறியிருந்த போதிலும், கொள்வனவு செய்யப்படவில்லை.

தேசிய இரத்த வங்கியால் நடைமுறைப்படுத்தப்பட்ட சட்ட நடைமுறைகளை மீறி இரத்த பிளாஸ்மாவும் வாங்கப்பட்டுள்ளது. டெண்டருக்குப் பிறகு, முதன்முறையாக, 18 சந்தர்ப்பங்களில் புரோட்டீன் பரிசோதனைக்காக தேசிய இரத்த வங்கியிலிருந்து இரத்தத் தட்டுக்களை வாங்கியுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

“மருந்துகளை வாங்கும்போது முறையான தரநிலைகளை சரிபார்க்க வேண்டும். இதற்கென மற்றொரு அதிகாரிகள் குழுவொன்று செயல்பட்டு வருகிறது. இவர்கள் கலந்துரையாடாமல் இதைச் செய்ய முடியாது. சந்தேகத்திற்குரிய நபருக்குப் பின்னால் ஒரு குழு உள்ளது.

No comments:

Post a Comment