(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
பல்கலைக்கழக பேராசிரியர்களின் வரி பிரச்சினையை தீர்ப்பதற்காக சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை வருமானவரி திணைக்களத்துக்கு அனுப்பி இருக்கிறோம். அதிகாரிகள் குறித்த அறிக்கையை தயாரித்து திறைசேரிக்கு அனுப்பி பொருத்தமான நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (05) நிலையியற் கட்டளை 27 இன் 2 கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பதிலளிக்கையில், பல்கலைக்கழக பேராசிரியர்களின் வரி பிரச்சினையை தீர்ப்பதற்காக சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை வருமானவரி திணைக்களத்துக்கு அனுப்பி இருக்கிறோம்.
அதிகாரிகள் குறித்த அறிக்கையை தயாரித்து திறைசேரிக்கு அனுப்பி பொருத்தமான நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம் .
இந்த பிரச்சினை தொடர்பாக எமது தரப்பினர் மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கிறது.
அத்துடன் கல்வி கொடுப்பனவு, மதிப்பீட்டு கொடுப்பனவு அனைத்தையும் சேர்த்தால் தொழில் வல்லுனர்கள் அனைவரும் நூற்றுக்கு 36 என்ற வரி அறிவிடும் தொகுதிக்கே உள்வாங்கப்பட்டிருக்கிறனர்.
அதன் பிரகாரமே இந்த வரி அறவிடப்பட்டது. இந்த வரி அறவிடும் தொகுதிக்கே அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்வாங்கப்பட்டிருக்கின்றனர்.
மேலும் பல்கலைக்கழக பேராசிரியர்களின் சில பிரச்சினைகளை நாங்கள் தீர்த்துக் கொண்டாேம். சட்டமா அதிபர் திணைக்களத்தின் நிலைப்பாட்டின் பிரகாரம் தற்போது நாங்கள் வருமானவரி திணைக்களத்துக்கு அனுப்பி இருக்கிறோம்.
தேசிய வருமான வரி திணைக்களம் அதனை நிதி அமைச்சுக்கு குறித்த அறிக்கையை அனுப்பி அது தொடர்பான பரிந்துரைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment