வெளியீட்டு வைக்கப்பட்டது "டாக்டர் ஷாஃபியின் அநீதிக்கு எதிரான போராட்டம்" நூல் - News View

About Us

About Us

Breaking

Saturday, May 10, 2025

வெளியீட்டு வைக்கப்பட்டது "டாக்டர் ஷாஃபியின் அநீதிக்கு எதிரான போராட்டம்" நூல்

எழுத்தாளர் அஷ்ரஃப் ஷிஹாப்தீனின் "டாக்டர் ஷாஃபியின் அநீதிக்கு எதிரான போராட்டம்" என்ற நூல் வெளியீட்டு வைக்கப்பட்டது.

இந்நிகழ்வானது 09.05.2025 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத் தொகுதியில் உள்ள 'ஜெஸ்மின்' அரங்கில் நடைபெற்றது.

இப்புத்தக வெளியீடு அப்ரார் அறக்கட்டளையின் தலைவர் சிறுவர் நல மருத்துவர் டாக்டர் ராயீஸ் முஸ்தபாவின் தலைமையில் நடைபெற்றது.

இப்புத்தக வெளியீட்டு விழாவுக்கு டாக்டர் ஷாஃபி ஷப்தீனின் மகள் ஸைனப் ஷாஃபி வரவேற்புரை ஆற்றினார்.

பிரதம விருந்தினராக மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், சிறப்பு விருந்தினர்களாக தென்கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் தலைவர் பாயிஸ் முஸ்தபா மற்றும் முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியும் கலந்துகொண்டனர்.

ஐ.நா.வுக்கான இலங்கையின் முன்னாள் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஏ.எல்.ஏ. அஸீஸ் 'நூல் கடந்த நோக்கு' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

மேலும் திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் திருமதி சுமையா ஷெரிபுதீன் நூல் பற்றிய கருத்துரையை வழங்கினார்.

நூலின் முதற் பிரதியை மாஸா கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் எஸ்.எச்.எம். அன்சார் பெற்றுக் கொண்டார்.

No comments:

Post a Comment