12 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைதான சந்தேகநபர் ஒருவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு திருட்டுச் சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று (09) காலை, கல்கிஸ்ஸை பிரிவு குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ராகுல மாவத்தை அருகே, மேற்கொண்ட சோதனையின் போது குறித்த சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர், 31 வயதுடைய மொரட்டுவை, கட்டுபெத்த பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் முன்னெடுத்த மேலதிக விசாரணைகளின்போது, இவர் மொரட்டுவை பொலிஸ் பிரிவில் நிகழ்ந்த வீடு உடைத்துத் திருடும் 2 சம்பவங்களுக்கும், வாகனமொன்றில் இருந்த மடிகணனி மற்றும் டெப் கணனிகள் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் என தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து குறித்த சந்தேகநபரிடமிருந்து மடிகணனி ஒன்று மற்றும் அதனுடன் தொடர்புடைய உபகரணங்கள் டெப் கணனிகள் 2, தங்க மாலை ஒன்று, காதணி ஒரு ஜோடி, எரிவாயு சிலிண்டர் 2 ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக கல்கிஸ்ஸை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment