வீசா காலாவதியாகியதன் காரணமாக பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளும் இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு காலம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவரிடம் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமைச்சரின் கோரிக்கையை இஸ்ரேல் அரசாங்கத்திடம் துரிதமாக முன்வைக்க நடவடிக்கை எடுப்பதாக இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் ஒப்புக் கொண்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் பல்வேறு துறைகளில் தற்போது பெருமளவான இலங்கையர்கள் பணியாற்றி வருவதாகவும் இலங்கையர்களுக்கு அதிக தொழில் வாய்ப்புகளை வழங்க இஸ்ரேல் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் இதன்போது தெரிவித்ததாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment