குறிஞ்சாக்கேணி பாலத்திற்கு நிதியுதவி வழங்க இணக்கம் : சவூதி அபிவிருத்தி நிதிய பிரதிநிதிகளின் இலங்கை விஜயத்திக்கான இணைப்பாளர் எம்.எஸ். தௌபீக் - News View

About Us

About Us

Breaking

Sunday, April 30, 2023

குறிஞ்சாக்கேணி பாலத்திற்கு நிதியுதவி வழங்க இணக்கம் : சவூதி அபிவிருத்தி நிதிய பிரதிநிதிகளின் இலங்கை விஜயத்திக்கான இணைப்பாளர் எம்.எஸ். தௌபீக்

சவூதி அரேபிய அரசாங்கம் இலங்கைக்கான திட்டங்களுக்கு தொடர்ந்தும் நிதி உதவிகளை வழங்கவுள்ளதாக உறுதியளித்துள்ளது.

சவூதி அபிவிருத்தி நிதிய பிரதிநிதிகளின் தற்போதைய இலங்கை விஜயத்திக்கான இணைப்பாளராக செயற்படுகின்ற பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் இதனை தெரிவித்தார்.

நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து பாதுகாக்கும் நோக்கிலேயே சவுதி அரேபியா உதவிகளை வழங்கவுள்ளதாகவும் இந்த திட்டங்கள் அனைத்தும் சவுதி அபிவிருத்தி நிதியத்தினுடாக மேட்கொள்ளப்படவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் இதன் முதற்கட்டமாக பொருளாதார நெருக்கடியினால் தற்போது கைவிடப்பட்டுள்ள கிண்ணியா, குறிஞ்சான்கேணி பாலத்திற்கு நிதியுதவி வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சவூதி அபிவிருத்தி நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும், நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் எம்.எம்.பீ.கே. மாயாதுன்னவிற்கும் 27.02.2023 ஆம் திகதி அமைச்சில் இடம்பெற்ற முக்கிய சந்திப்பிலேயே இவ்விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் தெரிவித்தார்.

இதன்போதே குறிஞ்சான்கேணி பாலத்திற்கு நிதியுதவி வழங்க சவூதி அபிவிருத்தி நிதியத்தின் இணக்கம் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறிஞ்சான்கேணி ஆற்றில் தற்கலிகமாக செயற்படுத்தப்பட்டு வந்த வள்ளம் கடந்த 2021 நவம்பரில் கவிழ்ந்து வீழந்தமையினால் 08 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்சந்திப்பில் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் ஹாலித் அல் கஹ்தானியும் பங்கேற்றிருந்தார்.

இலங்கையில் 12 அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு அவிவிருத்திக்கான சவூதி நிதியத்தினால் இதுவரை கிட்டத்தட்ட 424.7 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியளித்துள்ளமை குறிப்பித்தக்கது.

No comments:

Post a Comment