மட்டக்களப்பில் அதிகரிக்கும் டெங்கு : 22 வயது இளைஞன் மரணம் - News View

About Us

About Us

Breaking

Sunday, April 30, 2023

மட்டக்களப்பில் அதிகரிக்கும் டெங்கு : 22 வயது இளைஞன் மரணம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் இன்று வரை 765 டெங்கு நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர். அதில் செங்கல்லடியைச் சேர்ந்த 22 வயது இளைஞன் மரணம் அடைந்துள்ளார்.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு மாவட்டத்தின் முதன்மையான இடத்தை பெறுகின்றது.

இப்பிரிவில் 107 பேர் டெங்கு நோயாளிகளாக இனம் காணப்பட்டுள்ளனர். அதிலும் கொக்குவில் பிரதேசத்தில் ஒரே வீட்டில் நான்கு நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர். வெட்டுக்காடு இருதயபுரம் ஆகிய கிராமங்களிலும் மட்டக்களப்பு நகர வைத்திய சுகாதார பிரிவில் 35 வீதமானவர்களும் இப்பிரதேசங்களில் இனம் காணப்பட்டுள்ளனர்.

எனவே இதனை அடுத்து மண்முனை வடக்கு பிரதேச செயலப் பிரிவில் சனிக்கிழமை (29) காலை விசேட அதிரடி டெங்கு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி சுகுணன் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

கொக்குவில் பிரதேசத்தில் பொதுமக்களின் வீடுகள் கிணறுகள் சுற்றுப்புற சூழல்கள் என்பன பரிசோதிக்கப்பட்டு உரிய சுகாதார முறையில் வீடுகளை சுத்தமாக வைத்திருக்க தவறியவர்கள் மீது சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இவ்விஷேட பரிசோதனையின்போது மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ். வாசுதேவன் உட்பட பொது சுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதனைகள், சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் இந்த விசேட டெங்கு பரிசோதனையில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment