பாவனைக்குதவாத டின் மீன்களை வர்த்தக அமைச்சு சதொச மூலம் விற்பனை செய்தது : நுகர்வோர் அதிகார சபையின் முன்னாள் தலைவர் புதிய குற்றச்சாட்டு - News View

About Us

About Us

Breaking

Sunday, April 30, 2023

பாவனைக்குதவாத டின் மீன்களை வர்த்தக அமைச்சு சதொச மூலம் விற்பனை செய்தது : நுகர்வோர் அதிகார சபையின் முன்னாள் தலைவர் புதிய குற்றச்சாட்டு

2021 இல் பாவனைக்குதவாத டின் மீன்களை விற்பனை செய்யும்படி சதொசவிற்கு வர்த்தக அமைச்சு வேண்டுகோள் விடுத்தது என நுகர்வவோர் அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்று இயக்குநர் துசான் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

2021 ஜூலையில் சதொசவிற்கு வர்த்தக அமைச்சு அனுப்பிய இது குறித்த மின்னஞ்சல்களை அவர் வெளியிட்டுள்ளார்.

துறைமுக அதிகார சபை தடை செய்த டின் மீன்களை விற்பனை செய்யுமாறு வர்த்தக அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

துறைமுக அதிகார சபை தடை செய்துள்ள டின் மீன்களை சதொச மூலம் விற்பனை செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது என துசான் குணவர்த்தன வெளியிட்டுள்ள ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாவனைக்குதவாத டின் மீன்கள் என அறிவிக்கப்பட்டவற்றை எவ்வாறு விற்பனை செய்தது என கேள்வி எழுப்பியுள்ள துசான் அவ்வேளை இலங்கை நுகர்வோர் அதிகார சபை இதனை தடுக்க முயன்றது ஆனால் வர்த்தக அமைச்சு விற்பனையை தொடர விரும்பியது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது அரசாங்கத்தின் ஆதரவுடனான படுகொலை சதொசவில் தரங்குறைந்த பொருட்களே அதிகளவில் காணப்படுகின்றன எனவும் நுகர்வோர் அதிகார சபையின் முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment