புனானை பெற்றி கம்பஸில் இலத்திரனியல் உபகரணங்கள் திருட்டு - சந்தேகநபர்கள் இருவர் கைது - News View

About Us

Add+Banner

Sunday, October 31, 2021

demo-image

புனானை பெற்றி கம்பஸில் இலத்திரனியல் உபகரணங்கள் திருட்டு - சந்தேகநபர்கள் இருவர் கைது

.com/img/a/
மட்டக்களப்பு புனானையில் அமைந்துள்ள 'பெற்றி கம்பெஸ்' (Batti Campus) இல் பெறுமதி வாய்ந்த கணினி பொருட்கள் மற்றும் அதற்கு பயன்படுத்தும் இலத்திரனியல் உதிரிப்பாகங்கள் போன்றவற்றை களவாடியமை தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை மாலை கம்பஸிற்கு உள்ளே இருந்து வந்த வேனினை கடமையில் இருந்த பொலிசார் சோதனையிட்டபோது மேற்படி பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டு, வேனும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

வெற்றிக்கலோ கம்பஸ் தற்போது 'கொவிட்' நோய் தடுப்பிற்கான சிகிச்சை நிலையமாக செயற்படுத்தப்பட்டு வருகிறது. இவ் நிலையத்தில் கடமையாற்றும் உத்தியோகஸ்த்தர்களே இவ்வாறான குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது மடிக்கணினிகள் 03, மேசை விளக்குகள் 07 மற்றும் இலத்திரணியல் பொருட்க்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

மேற்படி பொலிஸ் நடவடிக்கையினை குற்றப்பிரிவிற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி ஜ.பி. எதிரிசிங்க தலைமையிலான பொலிஸ் குழவினரே மேற்கொண்டிருந்தனர். 

கைது செய்யப்பட்டவர்கள், பொருட்க்கள் மற்றும் வாகனம் போன்றவற்றை வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

பாசிக்குடா நிருபர்

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *