கொவிட் தொற்றை சமாளிக்க 23 மில்லியன் டொலர்கள் நிதி தேவை - News View

About Us

About Us

Breaking

Sunday, October 31, 2021

கொவிட் தொற்றை சமாளிக்க 23 மில்லியன் டொலர்கள் நிதி தேவை

உலக சுகாதார அமைப்பு, கொவிட்-19 நோய்த் தொற்றைச் சமாளிக்க உதவும் அதன் திட்டங்களுக்கு அடுத்த ஓராண்டுக்கு 23 பில்லியன் டொலருக்கும் மேற்பட்ட நிதி தேவைப்படுவதாகக் கூறியுள்ளது.

அதற்கு உடனடி நடவடிக்கை தேவை என அதன் தலைவர் டெட்ரோஸ் கெப்ரியேஸஸ் கூறினார்.

அதற்கான ஆதரவையும் நிதியுதவியையும் அதிகரிக்குமாறு ஜி20 நாடுகளை அவர் கேட்டுக் கொண்டார்.

கொவக்ஸ் தடுப்பு மருந்து பகிர்வுத் திட்டத்தின் கீழ், இவ்வாண்டு இறுதிக்குள் ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் தொகையில் குறைந்தது 40 வீதத்தினர் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கும் இலக்கை உலக சுகாதார அமைப்பு வகுத்துள்ளது. 

ஆனால், இதுவரை தயாரிக்கப்பட்டுள்ள அனைத்து வகை கொவிட்-19 தடுப்பு மருந்துகளில் 75 வீதத்தினை, வசதிபடைத்த 10 நாடுகள் பயன்படுத்தியிருப்பதை அது சுட்டிக்காட்டியது.

குறைந்த வருமான நாடுகள், அரை வீதத்திற்கும் குறைவான தடுப்பு மருந்துகளையே பெற்றுள்ளமை குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்தது.

No comments:

Post a Comment