பாடசாலை மாணவர்களுக்கு இரும்பு மற்றும் போலிக் அமிலம் அடங்கிய உணவு வழங்கும் நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் உலக உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம் ஆகியன இணைந்து இதற்கு இணை அனுசரணை வழங்கவுள்ளது.
இந்தத் திட்டம் தற்போது தம்புத்தேக கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் முன்னெடுக்கப்படுவமதாக விவசாய அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ். ருவன்சந்திர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்களே, போஷாக்கு குறைந்தவர்களாக காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment