ஜனாதிபதிகள், மனைவியரின் விசேட உரிமைகளை நீக்கும் சட்டமூலம் : வர்த்தமானியில் வெளியிடப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Thursday, July 31, 2025

ஜனாதிபதிகள், மனைவியரின் விசேட உரிமைகளை நீக்கும் சட்டமூலம் : வர்த்தமானியில் வெளியிடப்பட்டது

ஜனாதிபதிகள், மனைவியரின் விசேட உரிமைகள் நீக்கும் சட்டமூலம் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதிகள் மற்றும் காலஞ்சென்ற ஜனாதிபதிகளின் மனைவிமாருக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள விசேட சலுகைகளை இரத்துச் செய்யும் வகையில் குறித்த சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

இன்றைய (31) திகதியிடப்பட்ட குறித்த சட்டமூலம், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரான ஹர்ஷண நாணயக்காரவினால் வர்த்தமானிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது விதவைகளுக்கு வழங்கப்பட்ட விசேட சலுகைகளை இரத்து செய்வதற்கான சட்டமூலம் அடங்கிய யோசனை இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் சட்டத்தை (1986 ஆம் ஆண்டு இலக்கம் 4) திருத்துவதற்காக உருவாக்கப்பட்ட யோசனைகள் அடங்கிய சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் முன்மொழிவுக்கு இம்மாத ஆரம்பத்தில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதேவேளை, 1986 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க ஜனாதிபதி உரித்துரிமைச் சட்டம் மற்றும் 1977 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டம் ஆகியவற்றை இரத்து செய்வதை நோக்கமாகக் கொண்ட யோசனைகள் அடங்கிய சட்டமூலத்திற்கு கடந்த மாதம் அமைச்சரவை அனுமதி அளித்திருந்தது.

அதன் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது விதவைகள் மற்றும் முன்னாள் எம்.பி.க்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகள் இதன் மூலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment