சூரிய ஒளியில் விளையாடுவது மற்றும் அதனை அனுபவிப்பதன் குறைபாடு காரணமாக நாட்டில் சிறுவர்களிடையே விற்றமின் “டி” குறைபாடு கடுமையான உடல்நல பிரச்சினையாக மாறியுள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.
இது கடந்த 20 முதல் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பிரச்சினையாகவே இருந்ததில்லை.எனினும் தற்போது அது ஒரு பிரச்சனையாக மாறி யுள்ளதாகவும் குழந்தை நல மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
வைட்டமின் டி குறைபாட்டிற்கான முக்கிய காரணங்கள்
உடலில் சூரிய ஒளிபடாமலே இருப்பதுதான் மிக முக்கியமான காரணம். இன்றைய சூழலில் சிறுவர்கள் வெளியில் சென்று விளையாடுவதற்கு பதிலாக, படிப்பு, டியூஷன், வீடியோ கேம்கள், தொலைக்காட்சி பார்ப்பது மற்றும் போன்களைப் பயன்படுத்துவதில் நேரத்தை செலவிடுகின்றார்கள். போதிய விழிப்புணர்வு இல்லாததே இந்த நிலைக்கு காரணம்.
மிதமான சூரிய ஒளியின் மூலம்தான் பெரும்பாலான மனிதர்களுக்கு விற்றமின் “டி” சத்து கிடைக்கிறது என்பதைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லை.
உணவு ஆதாரங்கள் பற்றாக்குறை
மிகக் குறைவான உணவுகளே இயற்கையாக விற்றமின் “டி” ஐ கொண்டிருக்கின்றன. மேலும் அவை சிறுவர்கள் அல்லது பெரியவர்களின் விற்றமின் “டி” தேவையைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இருப்பதில்லை.
இலங்கையின் நிலை
மத்திய கிழக்கு நாடுகளில் (அதிக சூரிய வெப்பத்தால் வெளியே செல்வது கடினம்) மற்றும் ஐரோப்பிய நாடுகளில் (குளிர் காரணமாக) காணப்படும் விற்றமின் “எ” குறைபாடு தற்போது இலங்கையிலும் அதிகமாகக் காணப்படுகிறது. இலங்கை இயற்கையாகவே சூரிய ஒளியைப் பெறக்கூடிய நாடாக இருந்தபோதிலும் இது நிகழ்கிறது.
இலங்கையில் வைட்டமின் டி குறைபாடு
2024 ஆம் ஆண்டு கொழும்பு நகர்புற மாவட்டத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்படி விற்றமின் “டி” அளவு குறைவாக 93.9 சதவீதமாக காணப்படுகிறது.
இந்த குறைபாடு குறிப்பாக பெண்கள், இளம் வயதினர் மற்றும் அதிக நகர்ப்புறப் பகுதிகளில் அதிகமாக உள்ளது.
விற்றமின் “டி” குறைபாடு ஒரு உலகளாவிய தொற்றுநோயாக (pandemic) அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
விற்றமின் “டி” குறைபாட்டின் விளைவுகள்
சிறுவர்களுக்கு என்புருக்கி நோய் ஏற்படல்.
பெரியவர்களில் ஆஸ்டியோபீனியா, ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் எலும்பு முறிவுகளை துரிதப்படுத்தி மோசமாக்குகிறது.
பொதுவான புற்றுநோய்கள், தன்னுடல் தாக்கும் நோய்கள் (autoimmune diseases), உயர் இரத்த அழுத்தம் மற்றும் தொற்று நோய்கள் ஏற்படும் அபாயத்துடன் தொடர்புடையது.
தீர்வுகளும், பரிந்துரைகளும்
சிறுவர்கள் வெளியே சென்று விளையாட அனுமதிக்க வேண்டும்.
காலை 9 மணி முதல் 11 மணி வரை சூரிய ஒளியில் நிற்பது விற்றமின் “டி” பெறுவதற்கு சிறந்த நேரம். அடுத்த தலைமுறைக்கு சூரிய ஒளி வெளிப்பாடு மிக அவசியமாகும்.
விற்றமின் “டி” நிறைந்த உணவுகளான உலர்ந்த நெத்தலி, முட்டையின் மஞ்சள் கரு மற்றும் முருங்கை இலைகள் போன்றவற்றை அதிகமாக உண்ண வேண்டும்.
No comments:
Post a Comment