தம்பிலுவில் மயானத்தை தோண்டும் சி.ஐ.டி ! இனியபாரதி தலைமையில் கடத்தப்பட்டு காணாமல்போனோர் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 31, 2025

தம்பிலுவில் மயானத்தை தோண்டும் சி.ஐ.டி ! இனியபாரதி தலைமையில் கடத்தப்பட்டு காணாமல்போனோர்

இனியபாரதி தலைமையில் கடத்தப்பட்டு காணாமல்போன 18 வயது மாணவன் பார்தீபன், முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் சு.ரவீந்திரநாத் மற்றும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட ஆகியோர் படுகொலை செய்யப்பட்டு  புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் இந்து மயானத்தில்  தோண்டும் நடவடிக்கை வியாழக்கிழமை (31) அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சிஐடியினர் முன்னெடுத்துள்ளனர்.

கருணா கட்சியைச் சேர்ந்த இனியபாரதி என அழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்பாளருமான கே. புஷ்பகுமார் மற்றும் அவரது சகாவான சசீந்திரன் தவசீலன் ஆகியோரை 2007-6-28 ஆம் திகதி திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த 6ஆம் திகதி திருக்கோவில் மற்றும் மட்டு சந்திவெளி பகுதிகளில் வைத்து சிஐடியினர் கைது செய்தனர்.

இவர்களுடன் இனிய பாரதியின் சகாக்களான முன்னாள் சாரதி செந்தூரன், திருக்கோவில் விநாயகபுரத்தைச் சேர்ந்த தொப்பி மனாப் என்றழைக்கப்படும் விக்கினேஸ்வரன், வெலிகந்தை தீவுச்சேனையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் சபாபதி மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த யூட் என அழைக்கப்படும் ரமேஸ்கண்ணா ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையின் அடிப்படையில் கடந்த 2009ஆம் ஆண்டு ஜூலையில் திருக்கோவில் விநாயகபுரத்தைச் சேர்ந்த 18 வயதுடைய மாணவன் பார்தீபன், 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற கிழக்கு பல்கலைக்ழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எஸ்.ரவீந்திரநாத், 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் திகதி ஊடகவியலாளர் பிரதீப் எக்னலிகொட ஆகியோர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சிஐடியினர் கைது செய்யப்பட்டவர்களை  குறித்த மயானத்துக்கு கடந்த இரு தினங்களாக அழைத்துச் சென்று புதைக்கப்பட்ட இடங்களை அடையாளப்படுத்தினர். 

இதற்கமைய குறித்த மயான இடத்தை தோண்டி சோதனை செய்வதற்கு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் சி.ஐ.டி. யினர் அனுமதி கோரியதையடுத்து  நீதவான் ஏ.எல்.எம்.றிஸ்வான் முன்னிலையில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட மட்டக்களப்பைச் சேர்ந்த யூட் என அழைக்கப்படும் ரமேஸ்கண்ணா அடையானம் காண்பிக்கும் இடத்தை பெக்கோ இயந்திரம் கொண்டு இன்று (31) பிற்பல் 2.00 மணிக்கு தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதன்போது அங்கு இதுவரை எந்தவிதமான உடற்பாகங்களும் மீட்கப்படவில்லை என்பதுடன் குறித்த பகுதியில் மக்கள் திரண்டு நிற்பதை காணக்கூடியதாக இருந்தது.

No comments:

Post a Comment