நாய்க்கு இருப்பிடச் சான்றிதழ் கோரியவர் மீது வழக்குப்பதிவு : வழங்​கிய அதி​காரி மீது நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Thursday, July 31, 2025

நாய்க்கு இருப்பிடச் சான்றிதழ் கோரியவர் மீது வழக்குப்பதிவு : வழங்​கிய அதி​காரி மீது நடவடிக்கை

இந்தியாவின் பிஹார் மாநிலம் பாட்​னா​வில் நாய்க்கு இருப்​பிடச் சான்​றிதழ் வழங்கப்​பட்டது சர்ச்​சையை எழுப்பி​யுள்​ளது.

பிஹாரில் வாக்​காளர் பட்​டியல் சிறப்​புத் திருத்​தப் பணி நடை​பெற்று வரும் நேரத்​தில் நடந்த இச்சம்​பவம், அதி​காரப்​பூர்வ சரி​பார்ப்பு செயல்​முறை​கள் குறித்து கேள்வி​களை எழுப்பியுள்ளது.

நாய்க்கு வழங்​கப்​பட்ட இருப்​பிடச் சான்​றிதழ் விவர​மும் வெளியாகியுள்​ளது. அந்​தச் சான்றிதழ் எண் பிஆர்​சிசிஓ/2025/15933581, வார்டு எண் 15, மசாவர்ஹி நகராட்சி கவுன்​சில் என்​றும் இந்த பகுதியில் பாபு (நாய்) வசித்து வரு​கிறார் என்​றும் அந்த சான்​றிதழில் குறிப்பிடப்​பட்​டுள்​ளது.

நாய்க்கு இருப்​பிடச் சான்​றிதழ் வழங்​கப்​பட்ட விவ​காரம் சமூக வலைத்தளங்​களில் வைரலான நிலை​யில் இந்த இருப்​பிட சான்​றிதழ் நேற்றுமுன்​தினம் (29) இரத்து செய்யப்பட்டது.

இந்த விவ​காரத்​தில், சான்​றிதழ் பெற விண்ணப்பித்த கணினி ஊழியர் மற்​றும் அவருக்கு சான்றிதழ் அளித்த அதி​காரி ஆகியோருக்கு எதி​ராக முதல் தகவல் அறிக்​கை​யை (எப்​ஐஆர்) போலீஸார் பதிவு செய்​துள்​ளனர் என பாட்னா மாவட்ட நிர்​வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் சான்​றிதழ் வழங்​கிய அதி​காரி மீது நடவடிக்​கை எடுக்​க​வும்​ பரிந்​துரை செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment