சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மரணம் : உபவேந்தரிடம் கையளிக்கப்பட்ட விசாரணை அறிக்கை - News View

About Us

About Us

Breaking

Sunday, July 27, 2025

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மரணம் : உபவேந்தரிடம் கையளிக்கப்பட்ட விசாரணை அறிக்கை

பகிடிவதை காரணமாக சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய குழுவின் அறிக்கை பல்கலைக்கழக உபவேந்தரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த அறிக்கை அடுத்த வாரம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் (UGC) சமர்ப்பிக்கப்படும் என சப்ரகமுவ பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சுனில் சாந்த தெரிவித்துள்ளார்.

அதன்படி, தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த குறித்த மாணவரின் மரணம் தொடர்பில் விசாரணையில் கண்டறியப்பட்ட விடயங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சம்பவம் தொடர்பாக 70 மாணவர்களிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும், அதன்படி அவர்களிடமிருந்து 150 மணித்தியாலங்களுக்கும் மேலாக சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment