இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன கைது - News View

About Us

About Us

Breaking

Saturday, March 30, 2019

இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன கைது

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவரான திமுத் கருணாரத்ன கைது செய்யப்பட்டுள்ளார். மதுபோதையுடன் வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொரளை, கிங்ஸி ஹோட்டன் சந்தி பகுதியில் இன்று (31ஆம் திகதி) அதிகாலை 5.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி ஒருவர், சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் திமுத் கருணாரத்ன மதுபோதையுடன் காணப்பட்ட காரணத்தை அவரைக் கைது செய்துள்ளதாக, பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment