மீண்டும் விசாரணைக்கு கெஹெலியவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு வழக்கு - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 18, 2025

மீண்டும் விசாரணைக்கு கெஹெலியவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு வழக்கு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி ஹீன்கெந்த ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (18) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைகள் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வழிகாட்டுதலின் கீழ் முறைப்பாட்டில் மேலும் ஆதாரங்கள் பதிவு செய்யப்பட்டன.

பின்னர் நீதிமன்றம் மேலதிக சாட்சியங்களுக்காக ஜூன் மாதம்13 ஆம் திகதி வரை வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டது.

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி ஹீன்கெந்த ஆகியோர் மீது, அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் நிதியில் இருந்து தனது சொந்த கையடக்கத் தொலைபேசி கட்டணமாக ரூ. 240,000/- ஐ செலுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியதாகக் கூறி, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்குத் தொடர்ந்துள்ளது.

No comments:

Post a Comment