கைதான முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் - News View

About Us

About Us

Breaking

Friday, July 4, 2025

கைதான முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் இன்று (04) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று (04) கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது நண்பர்களுக்கு ரூ.25 மில்லியன் மதிப்புள்ள மக்காச்சோள விதைகளை விநியோகித்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் இன்று காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment