பாடசாலை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லாமையால் மாணவன் போராட்டம் - News View

About Us

About Us

Breaking

Friday, July 4, 2025

பாடசாலை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லாமையால் மாணவன் போராட்டம்

வவுனியா, பூந்தோட்டம் மகா வித்தியாலய மாணவன் ஒருவன் தன்னை பாடசாலையின் கல்விச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லவில்லை என தெரிவித்து வவுனியா தெற்கு வலயக்கல்வி அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏ்றப்படுத்தியுள்ளது.

குறித்த பாடசாலையால் இன்று (04) திருகோணமலை மாவட்டத்திற்கு கல்விச் சுற்றலா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக மாணவர்களிடம் இருந்து பணம் அறவிடப்பட்டுள்ளது.

குறித்த மாணவனும் சுற்றுலாவிற்கான பணத்தினை வழங்கியுள்ளார். இருப்பினும் காலை சுற்றுலாவிற்கு செல்வதற்கு மாணவன் தயாரான நிலையில் மாணவனை அழைத்துச் செல்ல முடியாது என அதற்கு பொறுப்பான ஆசிரியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கவலையடைந்த மாணவன் தனது பெற்றோருடன் வவுனியா தெற்கு வலயக்கல்வி அலுவலகம் முன்பாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தான். 

இதனையடுத்து வலயக்கல்வி அதிகாரிகள் பாடசாலை நிர்வாகத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி மாணவனை சுற்றுலா அழைத்துச் செல்வதற்கான ஏற்ப்பாடுகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை வழங்கியிருந்தனர். 

இதனையடுத்து மாணவன் தனது போராட்டத்தை கைவிட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment