2 ஆவது ஈஸ்டர் தாக்குதல் குருணாகலில்? : தேசிய மக்கள் சக்தி எம்.பி. ஒருவரின் பெயரையும் இணைத்து வெளியிட்ட காணொளியை அகற்றவும் : கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவு - News View

About Us

Add+Banner

Breaking

  

Thursday, February 6, 2025

demo-image

2 ஆவது ஈஸ்டர் தாக்குதல் குருணாகலில்? : தேசிய மக்கள் சக்தி எம்.பி. ஒருவரின் பெயரையும் இணைத்து வெளியிட்ட காணொளியை அகற்றவும் : கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

shutterstock_127229321
எஸ்.எல். இலக்ஷன் யூ ரியூப் மற்றும் முகப்­புத்­தகம், டிக்டொக் உள்ளிட்ட சமூக வலை­த்தள பக்­கங்­களில் ‘2 ஆவது ஈஸ்டர் தாக்­குதல் குரு­ணா­கலில்? திசை­காட்டி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் பின்ன­ணியில்’ எனும் தலைப்பில் வெளி­யி­டப்­பட்ட காணொ­ளியை உட­ன­டி­யாக அனைத்து தளங்­களில் இருந்தும் அகற்­று­மாறு கொழும்பு மாவட்ட நீதிவான் சந்துன் கமகே உத்­த­ர­விட்­டுள்ளார்.

சட்­டத்­த­ரணி மொஹம்மட் சுல்தான் ஷமீல் மொஹம்மட் கொழும்பு மாவட்ட நீதி­மன்றில் சட்­டத்­த­ரணி சந்­தீப கம­எத்தி ஊடாக தாக்கல் செய்­துள்ள ஒரு பில்­லியன் ரூபா நட்டஈடு கோரும் மான நட்டஈட்டு வழக்­கினை ஆராய்ந்தே இந்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்பட்­டுள்­ளது.

குரு­ணாகல் அஸ்­வெத்­தும ஜும்ஆ பள்­ளி­வா­சலில் செய­லா­ள­ராக சட்டத்­த­ரணி மொஹம்மட் சுல்தான் ஷமீல் மொஹம்மட் செயற்படுவ­தா­கவும், அவர் அப்­பள்­ளி­வா­சலில் சம்­பி­ர­தா­ய­பூர்­வ­மான முஸ்லிம் கலா­சார நட­வ­டிக்­கை­க­ளுக்கு தடை ஏற்­ப­டுத்தி அடிப்­படை வாதத்தை வளர்ப்­ப­தா­கவும், அவ­ரது பின்­ன­ணியில் தேசிய மக்கள் சக்தி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அஸ்லம் இருப்­ப­தா­கவும் கூறி, எஸ்.எல். இலக்ஷன் எனும் யூ ரியூப் தளத்தில் காணொளி ஒன்று வெளியி­டப்­பட்­டி­ருந்­தது. 

அதில் மேலும் பல விட­யங்கள் கூறப்­பட்­டி­ருந்த நிலையில், சட்டத்தரணி மொஹம்மட் சுல்தான் ஷமீல் மொஹம்­மட்டின் நற் பெய­ருக்கு களங்கம் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக கூறி, கொழும்பு மாவட்ட நீதி­மன்றில் வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டது.

குரு­ணாகல் பகு­தியை சேர்ந்த ஷஷிக திசா­நா­யக்க, எஸ்­வெத்­தும பகு­தியை சேர்ந்த மொஹம்மட் ஹனீபா மொஹம்மட் நசார், மொஹம்மட் ஹனீபா மொஹம்மட் ரிஸ்வான், மல்­ல­வ­பிட்­டியை சேர்ந்த மொஹம்மட் ஹனீபா மொஹம்மட் ராசிக் ஆகி­யோ­ருக்கு எதி­ராக இந்த வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

இந்த நிலையில் இவ்­வ­ழக்­கா­னது கடந்த திங்­க­ளன்று கொழும்பு மாவட்ட நீதிவான் சந்துன் விதான‌ முன்­னி­லையில் ஆரா­யப்­பட்­டது. 

இதன்­போது சட்­டத்­த­ர­ணி­க­ளான‌ மன­துங்க ஆரச்சி, ரிஸ்வான் உவைஸ் உடன் ஆஜ­ரான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப், மனுதாரர் சார்பில் விட­யங்­களை நீதி­ப­திக்கு தெளி­வு­ப­டுத்­தினார்.

அந்த வாதங்­களை ஏற்­றுக்­கொண்ட நீதி­பதி சந்துன் விதான, முதல் சந்­தர்ப்­பத்­தி­லேயே வழங்க முடி­யு­மான தடை உத்­த­ரவை பிறப்­பித்து, குறித்த காணொ­ளியை யூரியூப், பேஸ்புக், மற்றும் டிக்டொக் தளங்களில் இருந்து அகற்ற பிர­தி­வா­தி­க­ளுக்கு உத்­த­ர­விட்டார். 

இதனை நீதி­மன்ற பதி­வாளர் ஊடாக அறி­விக்­கவும் நட­வ­டிக்கை எடுக்குமாறும் உத்தரவிடப்பட்டது.

அத்துடன் குறித்த வழக்கை பரீசீலிக்க தீர்மானித்த நீதிபதி, பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்பவும் உத்தரவிட்டு வழக்கை எதிர்வரும் பெப்ரவரி 17 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

Vidivelli

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *