நாட்டில் சின்னம்மை தொற்று அதிகரிப்பு : தடுப்பூசி பற்றாக்குறை - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 14, 2025

நாட்டில் சின்னம்மை தொற்று அதிகரிப்பு : தடுப்பூசி பற்றாக்குறை

நாட்டில் தற்போது சின்னம்மை (Chicken Pox) நோயாளிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளதாகவும், வைத்தியசாலைகளில் தற்போது நோயைத் தடுக்க உதவும் வெரிசெல்லா தடுப்பூசி பாற்றாக்குறை நிலவுவதாக தவல்கள் வெளியாகியுள்ளன.

தனியார் வைத்தியசாலைகளில் அதிகாரிகள் சின்னம்மை தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதாக தெரிவித்துள்ளனர். தடுப்பூசி விலை 7,500 ரூபாய் முதல் 9,500 ரூபாய் வரை காணப்படுகிறது. அரசாங்க வைத்தியசாலைகளிலும் தடுப்பூசி பற்றாக்குறை காணப்படுகிறது.

இதன் காரணமாக கடந்த சில வாரங்களாக கணிசமான எண்ணிக்கையிலான நோயாளிகள் தனியார் வைத்தியசாலைகளில் தடுப்பூசியைச் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா கூறுகையில், அண்மைய நாட்களில் சின்னம்மை நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சின்னம்மை என்பது வெரிசெல்லா-ஜோஸ்டர் வைரஸ் (VZV) தொற்றால் ஏற்படும் நோயாகும். இந்த வைரஸ் சின்னம்மையால் பாதிக்கப்பட்ட தடுப்பூசி போடாத நபர்களிடமிருந்து மற்றையவர்களுக்குப் பரவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத மற்றும் பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களில் 90 சதவீதமானோருக்கு பரவக்கூடும்.

இந்த நோய் பொதுவாக நான்கு முதல் ஏழு நாட்கள் வரை நீடிக்கும். சின்னம்மையைத் தடுப்பதற்கான சிறந்த வழி சின்னம்மை தடுப்பூசியைப் பெறுவதே என தெரிவித்துள்ளார்.

"நோயாளிக்கு சின்னம்மை தொற்று ஏற்பட்டு 72 மணி நேரத்திற்குள் (மூன்று நாட்கள்) தடுப்பூசி போடுவது சிறந்ததாகும்.

சிறுவர்கள், இளம் வயதினர் மற்றும் ஒருபோதும் சின்னம்மை நோயால் பாதிக்கப்படாதவர்கள் அல்லது தடுப்பூசி செலுத்தப்படாத பெரியவர்கள் உட்பட அனைவருக்கும் சின்னம்மை தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது.

தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் பெரும்பாலானவர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளாார்.

"உரிய காலத்தில் தடுப்பூசியை செலுத்துவதால் சின்னம்மை வருவதற்கான அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கலாம் அல்லது தொற்று ஏற்பட்டால் நோயின் தீவிரத்தைக் குறைக்கலாம். 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசியை செலுத்த வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.

சின்னம்மை நோய் சாதாராணமானதாக காணப்பட்டாலும், கர்ப்பிணிப் பெண்கள், 12 மாதங்களுக்கும் குறைவான சிறுவர்கள், இளம் வயதினர், பெரியவர்கள் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு கடும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் எனதெ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment