கொழும்பு மாநகர சபையில் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியமைக்க ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளிக்கவில்லை : மக்களை மூடர்களென நினைத்து குறிப்பிடும் கருத்துக்கள் அரசாங்கத்தின் வாக்கு வங்கியை பலவீனப்படுத்தும் - திலும் அமுனுகம - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 14, 2025

கொழும்பு மாநகர சபையில் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியமைக்க ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளிக்கவில்லை : மக்களை மூடர்களென நினைத்து குறிப்பிடும் கருத்துக்கள் அரசாங்கத்தின் வாக்கு வங்கியை பலவீனப்படுத்தும் - திலும் அமுனுகம

(இராஜதுரை ஹஷான்)

கொழும்பு மாநகர சபையில் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளிக்கவில்லை. ஒத்துழைப்பை கோருவதற்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என சர்வஜன சக்தியின் தேசிய அமைப்பாளர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஏனைய எதிர்க்கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு விடுத்துள்ள அழைப்பு தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தியின் பொய் மற்றும் வெறுப்பூட்டும் கருத்துக்களை நாட்டு மக்கள் விளங்கிக் கொண்டுள்ளார்கள். அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 7 மாத காலத்துக்குள் 23 இலட்சம் வாக்கினை இழப்பது சாதாரணதொரு விடயமல்ல, அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளது.

பெரும்பான்மை பலம் உள்ளது என்ற காரணத்தால் தான்தோன்றித்தனமாக பேசுவதை ஆளும் தரப்பின் முன்னிலை உறுப்பினர்கள் இனியாவது தவிர்த்துக் கொள்ள வேண்டும். மக்களை மூடர்கள் என்று நினைத்துக் கொண்டு ஆளும் தரப்பு உறுப்பினர்கள் குறிப்பிடும் ஒவ்வொரு கருத்துக்களும் அரசாங்கத்தின் வாக்கு வங்கியை பலவீனப்படுத்தும்.

தனித்த பெரும்பான்மையுடன் கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைக்க முடியாத நிலை தேசிய மக்கள் சக்திக்கு ஏற்பட்டுள்ளது. இதுவே அரசாங்கத்தின் பலவீனத்தை எடுத்துக்காட்டுகிறது.

கொழும்பு மாநகர சபையில் கூட்டிணைந்து ஆட்சியமைப்பது தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஏனைய அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

கொழும்பு மாநகர சபையில் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளிக்கவில்லை. ஒத்துழைப்பை கோருவதற்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். முன்வைக்கப்படும் கொள்கை திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு ஒத்துழைப்பு வழங்குவது குறித்து ஆராய்வோம் என்றார்.

No comments:

Post a Comment