விரைவில் ஹஜ் சட்டம் ! பரிந்துரைகளை முன்வைக்க நீதியரசர் சலாம் தலைமையில் குழு - News View

About Us

About Us

Breaking

Thursday, February 6, 2025

விரைவில் ஹஜ் சட்டம் ! பரிந்துரைகளை முன்வைக்க நீதியரசர் சலாம் தலைமையில் குழு

இலங்கையர்களின் ஹஜ் யாத்­தி­ரையினை ஒழுங்­கு­ப­டுத்தும் நோக்கில் ஹஜ் சட்டமூல­மொன்றை விரைவில் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்றி சட்­ட­மாக்­கு­வ­தற்கு ஜனா­தி­பதி அனுரகுமார திசாநாயக்க தலை­மை­யி­லான தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம் தீர்மா­னித்­துள்­ளது.

இந்த சட்ட மூலத்­திற்­கான பரிந்­து­ரை­களை முன்­வைப்­ப­தற்­காக ஒன்பது பேரைக் கொண்ட குழு­வொன்று புத்­த­சா­சன, சமய மற்றும் கலா­சார அமைச்சின் செய­லாளர் ஏ.எம்.பி.எம்.பீ. அத­பத்­து­வினால் அண்­மையில் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.

ஓய்­வு­ பெற்ற நீதி­ய­ரசர் ஏ.டப்­ளியூ.ஏ. சலாம் தலை­மையில் நியமிக்கப்பட்ட இந்தக் குழுவின் பணி­கள் மே மாதம் 31ஆம் திகதியுடன் நிறை­வு­ செய்­யப்­பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்­ளது.

விஞ்­ஞான மற்றும் தொழி­நுட்ப அமைச்சின் செய­லாளர் வை.எல்.எம். நவவி, நீர்ப்­பா­சன அமைச்சின் மேல­திக செய­லாளர் எம்.பீ. லுதுபுர் ரஹ்மான், அரச ஹஜ் குழுவின் தலைவர் றியாஸ் மிஹுலர், வக்பு நியாய சபையின் உறுப்­பி­ன­ரான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஏ.ஏ.எம். இல்யாஸ், சட்­டத்­த­ரணி அக்ரம், ஹஜ் நிதியம் தொடர்­பான வங்கியாளரும் சிரேஷ்ட பணிப்­பா­ள­ரு­மான சப்றி கௌஸ் மற்றும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் ஆகி­யோரும் இந்த குழுவின் உறுப்­பி­னர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். 

இத­னி­டையே, குழுவின் செய­லா­ள­ராக சிரேஷ்ட சட்­டத்­த­ரணி என்.எம். ரயாஸ் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இக்­கு­ழுவின் உறுப்­பி­னர்­களும் உத்­தி­யோ­கத்­தர்­களும் பங்­கேற்கும் ஒவ்வொரு அமர்விற்கும் பொருத்தமான கொடுப்பனவு ஹஜ் நிதியத்திலிருந்து வழங்கப்படும் எனவும் நியமனக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Vidivelli

No comments:

Post a Comment