(இராஜதுரை ஹஷான்)
உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகளின் பிரதான பதவிகளுக்கு பரிந்துரைக்கப்படுபவர்களின் பெயர் விபரங்களை ஒரு வார காலத்துக்குள் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்கு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு அறிவித்துள்ளது.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகளுக்கான தேர்தல் கடந்த வாரம் நடைபெற்று, தேர்தல் முடிவுகள் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 339 உள்ளுராட்சி மன்ற அதிகார சபைகளின் பதவிக்காலம் 2025.06.02 ஆம் திகதியில் இருந்து ஆரம்பமாகும்.
உள்ளுராட்சி மன்ற அதிகார சபைகளில் பெரும்பான்மையைப் பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் அந்த அதிகார சபைகளின் மேயர், துணை மேயர், தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்களை இன்றிலிருந்து ஒரு வார காலத்துக்குள் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
உள்ளுராட்சி மன்ற அதிகார சபைகளின் கன்னிக் கூட்டம் எதிர்வரும் மாதம் 2 ஆம் திகதிக்கு கூடுவதற்கு முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை கோட்டா மட்டத்தில் வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்க வேண்டும்.
உள்ளுராட்சி மன்றங்களில் பெரும்பான்மை இல்லாதவிடத்து, எதிர்வரும் மாதம் 2 ஆம் திகதி சபை கூடும்போது வாக்கெடுப்பு நடைபெறும். ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி கொழும்பு மாநகர சபையில் 48 ஆசனங்களை பெற்றுக் கொண்டுள்ளது. ஆளும் தரப்பினை காட்டிலும் எதிர்க்கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் பெற்றுக் கொண்டுள்ள உறுப்புரிமையின் எண்ணிக்கை தேசிய மக்கள் சக்தியை காட்டிலும் அதிகமாக காணப்படுகிறது.
2023 ஆம் ஆண்டு 3 ஆம் இலக்க தேர்தல் செலவுகளை ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின் பிரகாரரம் தேர்தல் 21 நாட்களுக்குள் தேர்தல் செலவுகள் தொடர்பான விபரதிரட்டை சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் கட்சிகள் சுயேச்சைக் குழுக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment