கொத்மலை பஸ் விபத்து : பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட 35 தொலைபேசிகள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 14, 2025

கொத்மலை பஸ் விபத்து : பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட 35 தொலைபேசிகள்

கண்டி - நுவரெலியா வீதியில் கொத்மலை, ரம்பொட கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் சிக்கியவர்களால் கைவிடப்பட்ட சுமார் 35 கையடக்கத் தொலைபேசிகள் கொத்மலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கண்டி - நுவரெலியா வீதியில் கொத்மலை, ரம்பொட கெரண்டி எல்ல பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலை 4.30 மணியளவில் பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

விபத்தில் சிக்கியவர்களால் கைவிடப்பட்ட சுமார் 35 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பயணப் பொதிகள் உள்ளிட்ட பொருட்களின் அடையாளத்தை உறுதிப்படுத்திப் பெற்றுக் கொள்ள முடியும் என கொத்மலை பொலிஸ் நிலைய பொறுப்திகாரி தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் உதவியுடன் இந்த கையடக்கத் தொலைபேசி, பயணப் பொதிகள் மற்றும் பஸ் நடத்துனரின் பணம் என்பன பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இவ்விபத்தில் பஸ் சாரதி உயிரிழந்த நிலையில் பஸ் நடத்துனர் காயமடைந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் எனவும் கொத்மலை பொலிஸ் நிலைய பொறுப்திகாரி தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் 23 பேர் உயிரிழந்திருந்த நிலையில் சுமார் 40 பேர் காயமடைந்து நாவலப்பிட்டி, கம்பளை மற்றும் நுவரெலியா, கண்டி, பேராதனை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இளைஞன் ஒருவன் இன்று புதன்கிழமை (14) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் திஸ்ஸமஹாராம பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞன் என பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, கொத்மலை பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24ஆக உயர்வடைந்துள்ளதாக கொத்மலை பொலிஸ் நிலைய பொறுப்திகாரி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment