மஹிந்தவுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் நாட்டில் கலவரம் தோற்றம் பெறும் : உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிட பேச்சு - பிரமித்த பண்டார - News View

About Us

Add+Banner

Wednesday, January 29, 2025

demo-image

மஹிந்தவுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் நாட்டில் கலவரம் தோற்றம் பெறும் : உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிட பேச்சு - பிரமித்த பண்டார

Pramitha-Bandara-Thennakoon
(இராஜதுரை ஹஷான்)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு நாட்டுக்கு முக்கியமானது. அவருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் இந்த நாட்டில் மீண்டும் கலவரம் தோற்றம் பெறும். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிடுவது தொடர்பில் அனைவருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எதிர்வரும் வியாழக்கிழமை (30) பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் திங்கட்கிழமை (27) இரவு கொழும்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து போட்டியிட வேண்டும், செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம்.

பொருளாதார மீட்சிக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்த தீர்மானங்கள் சிறந்தது என்பதால் ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கினோம்.

எமது இடைக்கால அரசாங்கத்தின் தீர்மானங்கள் சரி என்று ஏற்றுக் கொள்ளும் நிலையில் மக்கள் இன்று உள்ளார்கள்.

பொதுஜன பெரமுனவுக்கு எதிராக நாங்கள் செயற்படவில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதான கௌரவம் இன்றும் அவ்வாறே உள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு நாட்டுக்கு முக்கியமானது. அவருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் இந்த நாட்டில் மீண்டும் கலவரம் தோற்றம் பெறும்.

எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில் போட்டியிடுவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். தற்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.

புதிய ஜனநாயக முன்னணி (சிலிண்டர்) அணியில் நாங்கள் தற்போது இல்லை. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எதிர்வரும் வியாழக்கிழமை (30) பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *