தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது - News View

About Us

About Us

Breaking

Thursday, January 23, 2025

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது

2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

தற்போது பரீட்சைகள் திணைக்கள இணையத்தளத்தில் அதனை பார்வையிடலாமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சீ. அமித் ஜயசுந்தர அறிவித்துள்ளார்.

பெறுபேறுகளை பார்வையிட www.doenets.lk/examresults

2024 செப்டெம்பர் 15 ஆம் திகதி நடைபெற்ற மேற்படி பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (23) வெளியிடப்பட்டுள்ளன.

விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை
323,900

தோற்றியவர்களின் எண்ணிக்கை
319,284

வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளி பெற்றவர்களின் எண்ணிக்கை
51,244

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk எனும் உத்தியோகபூர்வ இணையத்தளங்களுக்குள் பிரவேசிப்பதன் மூலம் பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

பரீட்சார்த்திகளின் சரியான சுட்டெண்ணை உள்ளடக்குவதன் மூலம் பெறுபேற்றை பார்வையிட முடியும் என்பதுடன் உரிய பரீட்சைப் பெறுபேற்று அட்டவணையை தரவிறக்கம் செய்து அச்சுப் பிரதியைப் பெற்றுக் கொள்வதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

உதவிப் பணம் பெற்றுக் கொள்ளும் பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை 20,000 என்பதுடன் அதில் 250 விசேட தேவையுடைய பரீட்சார்த்திகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பரீட்சார்த்திகள் பெற்றுக் கொண்ட மொத்தப் புள்ளிகள் மாவட்டம், மொழி மூலங்களின் அடிப்படையில் உரிய வெட்டுப்புள்ளிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.

விசேட தேவைத் தொகுதியின் கீழ் புலமைப்பரிசிலுக்கு உரித்தான பரீட்சார்த்திகளின் மொத்தப் புள்ளிகளுடன் அவர்கள் புலமைப்பரிசில் பெற்றுக் கொண்டமைக்கான விசேட குறிப்பொன்றும் தரப்பட்டுள்ளது.

அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயநர் பெயர் (User Name), கடவுச்சொல் (Password) ஆகியவற்றைப் பயன்படுத்தி 2025.01.24 ஆம் திகதியோ அதற்குப் பின்னரோ உரிய பாடசாலையின் பரீட்சைப் பெறுபேற்று அட்டவணையை தரவிறக்கம் செய்து அச்சுப் பிரதியைப் பெற்றுக் கொள்வதற்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. 

பரீட்சார்த்திகளின் பெறுபேற்று அட்டவணை பெறுபேற்று மேன்முறையீடுகள் பரிசீலிக்கப்பட்ட பின்னர் பாடசாலைகளுக்கு தபாலில் அனுப்பி வைக்கப்படும்.

https://onlineexams.gov.lk/eic இல் School Account Login இல் பிரவேசிக்கவும்.

மாகாண கல்விப் பணிப்பாளர்களும், வலயக் கல்விப் பணிப்பாளர்களும் தமக்கு வழங்கப்பட்டுள்ள பயநர் பெயர் (User Name), கடவுச்சொல் (Password) ஆகியவற்றைப் பயன்படுத்தி தமது மாகாண/ வலயத்திலுள்ள சகல பாடசாலைகளினதும் பெறுபேற்றை தரவிறக்கம் செய்து கொள்வதற்கும் பார்வையிடுவதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

https://onlineexams.gov.lk/onlineapps இல் Exam Result Sheets ஐ கிளிக் செய்யவும்.

எவரேனும் பரீட்சார்த்திகளுக்கு புள்ளிகள் தொடர்பாக மேன்முறையீடு செய்துகொள்ள வேண்டிய தேவை இருப்பின் 2025 ஜனவரி மாதம் 27 ஆம் திகதி தொடக்கம் 2025 பெப்ரவரி மாதம் 06 ஆம் திகதி வரை நிகழ்நிலை முறைமையில் மேன்முறையீட்டை சமர்ப்பிக்க முடியும்.

மேலதிக விசாரணைகளுக்கு

நேரடி தொலைபேசி இலக்கம்
1911

பாடசாலைப் பரீட்சைகள் ஒழுங்கமைப்புக் கிளை
0112784208/ 0112784537/ 0112786616/ 0112785922

இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர வெளியிட்டுள்ள அறிவித்தல் வருமாறு,
இதேவேளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இன்று (23) பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.

புலமைப்பரிசில் பரீட்சையுடன் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக பெறுபேறுகளின் மதிப்பீட்டை இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவிட்டதால், பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

பெறுபேறுகளுக்காக இவ்வளவு நேரம் எடுத்தது எங்களுக்கு மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஆனால் அதற்கு காரணம், ஐந்தாம் தரப் புலமைப் பரீட்சையில் ஏற்பட்ட நெருக்கடியுடன் எழுந்த நீதிமன்ற உத்தரவின் காரணமாக வினாத்தாள் மதிப்பீட்டை நிறுத்தி வைக்க வேண்டியிருந்தது. அதனை நாங்கள் விரைவில் சரி செய்வோம் எனத் தெரிவித்திருந்தார்.

மேலும், புலமைப்பரிசில் பரீட்சையுடன் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாக பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக, பெறுபேறு மதிப்பீட்டு நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இவ்வாறு சர்ச்சைகளுக்கு மத்தியில் தற்போது புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment