கைதான அநுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட 4 பேருக்கும் பிணை : 6.1 மில்லியன் ரூபா நிதி முறைகேடு பற்றி CID விசாரணை - News View

About Us

About Us

Breaking

Thursday, January 23, 2025

கைதான அநுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட 4 பேருக்கும் பிணை : 6.1 மில்லியன் ரூபா நிதி முறைகேடு பற்றி CID விசாரணை

குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களையும் பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

2014 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பிங்கிரிய மற்றும் நாரம்மல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாகக்கூறி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடமிருந்து ரூ. 6,146,110 தொகையைப் பெற்று, அந்தப் பணத்தை இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது பிரசாரம் செய்தமை மூலம் அரச சொத்துகள் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டின அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

நேற்று (22) மாலை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் இன்றையதினம் (23) கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ண கெக்குனவல முன்னிலையில் ஆஜர்டுத்தப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர் குறித்த உத்தரவைப் பிறப்பித்தார்.

சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் இந்த கைது இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே. புத்திக மனதுங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment