திடீர் விபத்துக்களால் உயிரிழக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ! - News View

About Us

About Us

Breaking

Thursday, July 3, 2025

திடீர் விபத்துக்களால் உயிரிழக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !

திடீர் விபத்துக்களில் சிக்கி உயிரிழக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் சிறுவர் நல வைத்திய நிபுணர் பேராசிரியர் ருவந்தி பெரேரா தெரிவித்துள்ளார்.

தேசிய விபத்து தடுப்பு வாரத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே வைத்தியர் ருவந்தி பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டிலுள்ள தரவுகளை ஆய்வு செய்யும்போது, திடீர் விபத்துக்களால் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றது.

பெரும்பாலான விபத்துக்கள் அறியாமை மற்றும் சோதனை செய்யும் முயற்சிகளினால் ஏற்படுகின்றன. இந்த திடீர் விபத்துக்கள் பல வடிவங்களில் இடம்பெறுகின்றன.

2 முதல் 3 வயதுக்கிடையிலான சிறுவர்கள் அறியாமையால் ஏற்படும் விபத்துக்குள்ளாகுகின்றனர்.

12 முதல் 14 வயதுக்கிடையிலான சிறுவர்கள் பல்வேறு சோதனை முயற்சிகளால் விபத்துக்குள்ளாகுகின்றனர்.

கீழே தவறி விழுதல், சுளுக்கு மற்றும் தீக்காயங்கள் ஏற்படல் ஆகியவை சிறுவர்கள் பொதுவாக எதிர்கொள்ளும் விபத்துக்களாகும்.

விபத்துக்களை தடுப்பதற்காக சிறுவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியம் எனவும் பேராசிரியர் ருவந்தி பெரேரா வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment