தனது தேசிய பாடத்திட்டத்தில் ஜனாதிபதி "ஜி ஜின்பிங் சிந்தனை" அறிமுகப்படுத்தும் என்று சீன கல்வி அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புதிய வழிகாட்டுதல்களில் தெரிவித்துள்ளது.
சீன ஜனாதிபதியின் அரசியல் சித்தாந்தத்தின் போதனை "இளைஞர்கள் மார்க்சிய நம்பிக்கைகளை நிறுவ" உதவும் என்றும் கல்வி அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஜனாதிபதியின் சித்தாந்தம் ஆரம்பப் பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரை ஒருங்கிணைக்கப்படும்.
சமூகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கை ஒருங்கிணைக்கும் ஜி ஜின்பிங்கின் சமீபத்திய முயற்சி இது.
2018 ஆம் ஆண்டில் சீனாவின் "ஜி ஜின்பிங் சிந்தனை" உயர்மட்ட அரசியலமைப்பில் நிறுவப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment