பரிந்துரைக்கப்பட்ட எல்லை நிர்ணயத்தை நடைமுறைப்படுத்தக் கோரியும், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் பக்கச்சார்பான நிருவாகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் போராட்டம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 8, 2025

பரிந்துரைக்கப்பட்ட எல்லை நிர்ணயத்தை நடைமுறைப்படுத்தக் கோரியும், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் பக்கச்சார்பான நிருவாகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் போராட்டம்

எஸ்.எம். முர்ஷித் 

கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்துக்கு அருகில் செவ்வாய்க்கிழமை (8) மக்கள் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கல்குடா மஜ்லிஸ் சூரா சபையின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை (08.07.2025) காலை 11.30 மணி முதல் கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்கு முன்னால் தொடர் போராட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது.

கோறளைப்பற்று தெற்கு, கிரான் மற்றும் கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலகம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபரினால் எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள சிபார்சுக்கு எதிராகவும் தங்களுக்கு வழங்க வேண்டிய காணியை முறையாக வழங்க கோறியும் பிரதேச மக்களால் இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

பனம்பலன ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட எல்லை நிர்ணயத்தை நடைமுறைப்படுத்தக் கோரியும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் பக்கச்சார்பான நிருவாகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் குறித்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

எமது நிலம் எமது உரிமை எமக்கெதிரான சதிகளுக்கு ஜனநாயக ரீதியாகப்போராடுவோம். கல்குடா சமூகமே ஒன்றுபடுங்கள். எமது சந்ததிகளின் வாழும் உரிமைக்காக குரல் கொடுக்க ஒன்றுபடுங்கள் என கோசங்கள் முன்வைக்கப்பட்டு குறித்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

மட்டக்கப்பு மாவட்ட செயலக நிர்வாகம் மேற்கொண்டு வரும் அநீதிக்கெதிராக 'கல்குடா மஜ்லிஸ் சூரா சபை ஏற்பாடு செய்துள்ள தொய்வற்ற தொடர் போராட்டத்திற்கு கல்குடா பிரதேசத்திலுள்ள அனைத்து அமைப்புக்கள், கழகங்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்களும் தமது ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் சூரா சபை கேட்டுக்கொள்கின்றது. கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்கு முன்னால் தொடர் போராட்டம்.

No comments:

Post a Comment