கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் உச்சத்தை எட்டிய ASPI : 8,920.71 - நாளின் இறுதியில் மொத்த புரள்வு ரூ. 10.49 பில்லியன் - News View

About Us

About Us

Breaking

Thursday, August 26, 2021

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் உச்சத்தை எட்டிய ASPI : 8,920.71 - நாளின் இறுதியில் மொத்த புரள்வு ரூ. 10.49 பில்லியன்

கொழும்பு பங்குச் சந்தையின் வரலாற்றில் முதல்முறையாக, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) 8,920 ஆக பதிவாகியுள்ளது.

இன்றைய நாளின் (26) கொடுக்கல் வாங்கலின் நிறைவில் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 8,920.71 ஆக பதிவாகியிருந்தது.

இதற்கு முன்னர் 8,812.01 எனும் வரலாற்று உச்சத்தை அது இன்றையதினம் கடந்திருந்தது.

பரிமாறப்பட்ட பங்குகளின் எண்ணிக்க 285,411,500 (285.41 மில்லியன்) ஆகவும் மொத்த புரள்வு ரூபா 10,498,120,951.40 (ரூ. 10.49 பில்லியன்) ஆகவும் பதிவாகியிருந்தது.

No comments:

Post a Comment