சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை முறையிட தொலைபேசி இலக்கம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 8, 2025

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை முறையிட தொலைபேசி இலக்கம்

சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் தொடர்பில் முறைப்பாடு அளிப்பதற்கு பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் 109 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்து.

சிறுவர்களை யாசகம் மற்றும் கடினமான தொழில்களில் ஈடுபடுத்துதல், துன்புறுத்துதல், துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்குமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்து.

சிறுவர்களை பாதுகாப்பது சமூகத்தின் பாரிய பொறுப்பாகும். எனவே, சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment