மிலேனியம் செலென்ஜ் ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கையொப்பமிட அமைச்சரவையின் அங்கீகாரம் போதுமானது எனத் தெரிவித்திருக்கும் நிதியமைச்சர் மங்கள சமரவீர, உறுதிப்படுத்தப்படாத ஆவணம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதிக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விவகாரத்தைக் காட்டி எதிரணியினர் மக்கள் மத்தியில் அமெரிக்க பீதியைத் தோற்றுவிக்க முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிலேனியம் செலேன்ஜ் ஒத்துழைப்பு உடன்படிக்கை தொடர்பில் நிதியமைச்சர் மங்கள சமரவீர நேற்று (03) விடுத்த அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது மிலேனியம் செலேன்ஜ் ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கையொப்பமிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப் பெற்றிருப்பதால் அதில் கையெழுத்திட்ட பின்னர் அனுமதிக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
நாட்டு மக்கள் உட்பட அவசியப்படும் அனைவரதும் விமர்சனத்திற்காக அரசியலமைப்புக்கு அமைவாக அது சரியானதென சட்ட மா அதிபரால் இணக்கம் தெரிவிக்கப்பட்டிருப்பதால் உடன்படிக்கை பிரதியையும் வெளியிட்டிருக்கின்றோம்.
பாராளுமன்ற செயற்பாடுகள் தொடர்பில் சரியான புரிதலற்ற சில உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து விவாதிக்கப்பட வேண்டுமென கூறித்திரிகின்றனர். ஆனால் உறுதிப்படுத்தப்படாத ஆவணம் தொடர்பில் பாராளுன்றத்தில் விவாதிக்க முடியாது என்பதை தெரிவிக்க விரும்புகின்றேன்.
இந்த உடன்படிக்கையை சட்டபூர்வமாவது பாராளுமன்றத்தில் சட்டபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னரே என்ற விடயம் உடன்படிக்கைக்குள்ளேயே உள்ளடக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சட்டவிதிகளுக்கமைய இந்த உடன்படிக்கை வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டால் அதன் மூலம் பிரச்சினை ஏற்படலாம் என யாராவது ஒரு பிரஜை கூறுவாரானால் அவர் எதிராக நீதிமன்றத்தை நாட முடியும்.
இப்போது இது தொடர்பான அங்கீகாரம் சட்ட மா அதிபரால் கிடைக்கப் பெற்றிருப்பதால் உடன்படிக்கை கைச்சாத்திடுவதில் சட்டச்சிக்கல் எதுவும் கிடையாது என்றார்.
எம்.ஏ.எம். நிலாம்
No comments:
Post a Comment