(எச்.எம்.எம்.பர்ஸான்)
வெளிநாடு சென்ற இலங்கை பெண்ணிடம் இருந்து எதுவித தொடர்பும் இல்லை என்று குடும்பத்தினர் கவலை தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் அந்த பெண்ணின் குடும்பத்தினர் தெரிவிக்கையில், வாழைச்சேனை - பிறைந்துறைச்சேனை மஜீத் ஆலிம் வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய மூன்று பெண் பிள்ளைகளின் தாயான ஹயாத்து முகம்மது ஐதுறூஸ் நௌபியா என்பவர் பணிப் பெண்னாக வெளிநாடு சென்றுள்ளார்.
சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் டுபாய் நாட்டுக்குச் சென்றவர் ஒரு மாதம் அளவில் டுபாயில் வேலை செய்து விட்டு அங்கிருந்து ஓமான் நாட்டிற்கு சென்று பணிப் பெண்னாக வேலை செய்து வந்த நிலையிலே இவரது தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
பெண்னை அனுப்பிய முகவர் நிலையம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் போன்றவைகளிலும் இவரை கண்டுகொள்ள பல முயற்சி செய்தும் இதுவரை எவ்விதமான பயனும் கிடைக்கவில்லை என்று குடும்பத்தினர் மேலும் தெரிவித்தனர்.
ஓமானிலிருக்கும் நபர்கள் குறித்த பெண் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் அவரது சகோதரர் சாஜஹான் என்பவரின் கீழுள்ள தொலைபேசி இலக்கத்துடன் 0096565850217 தொடர்பினை ஏற்படுத்தி தகவல்களை வழங்குமாறு குடும்பத்தினர் வேண்டிக் கொள்கின்றனர்.
No comments:
Post a Comment