ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச தற்போது வெற்றிக்கம்பத்தின் அருகில் உள்ளதால் எதிர்வரும் சில தினங்கள் மிக முக்கியமானதாக இருக்கும் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
சஜித் பிரேமதாச தாம் வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாட்டு மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கின்ற முக்கிய யோசனைகளை உள்ளடக்கியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.
கொழும்பு வொக் ஷோல் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பிரசார அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எனக்கும் எவ்வித பிரச்சினையும் கிடையாது. அண்மைக் காலமாக நான் பல தடவைகள் அவரைச் சந்தித்தேன்.
இந்நிலையில் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்கும் பணிகளிலேயே நாம் இப்போது மும்முரமாக ஈடுபட்டு வருகின்றோம்.
சஜித் பிரேமதாசவிடம் ‘வன் மேன் ஷோ” கிடையாது. அந்த வகையில் அவரது குடும்பத்தினர் எவரும் பிரதமராக நியமிக்கப்படமாட்டார்கள் என்றார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment