பிரதான வேட்பாளர்களிடம் இருந்து இரண்டு விதமான தேர்தல் விஞ்ஞாபனங்கள் வந்துள்ளன. இதில் நான் ஆதரிக்கின்ற தேர்தல் விஞ்ஞாபனத்திற்கும் அந்த அமைப்பிற்கும் நானே பொறுப்பு என ஈ.பி.டி.பி செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரித்து பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அவர், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மூங்கிலாற்று பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இதில் நான் ஆதரிக்கின்ற தேர்தல் விஞ்ஞாபனத்திற்கும் அந்த அமைப்பிற்கும் நானே பொறுப்பு.
நான் பாராளுமன்றத்தில் எழுப்பிய பல கேள்விகளுக்கு சலப்பலாக அதில் பதில் சொல்லியுள்ளார். தொல்பொருள் திணைக்களம், வனஇலாகா திணைக்களம் வனஜீவராசிகள் திணைக்களம் என்பன தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கின்றன. அதற்கு பரிகாரம் என்ன என்ற கேள்விகளுக்கு பதில்களாக ஒரு சலப்பலாக கொடுத்துள்ளார்.
அவர்கள் முன்னர் ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தினை வெளியிட்டிருந்தார்கள். அதுவும் மக்களை கவரக்கூடியவாறு இருந்தது. ஆனால் நடைமுறையில் எதனையும் காணமுடியவில்லை அது சிலுசிலுப்பாக இருந்தது. ஆனால் மக்களுக்கு பரிகாரம் கிடைக்கவில்லை.
நான் ஆதரிக்கின்ற மொட்டு சின்னத்தின் தேர்தல் விஞ்ஞாபனம் எங்களுடனும் சம்பந்தப்பட்டது. நான் அதனை ஆதரிக்கின்றேன். அதில் சொல்லப்படாத விடயங்களுக்கும் கூட அதனையும் பொறுப்பெடுத்து அதனையும் நான் செய்விப்பேன் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் டக்ளஸ் தேவானந்தா இதன்போது தெரிவித்தார்.
மாங்குளம் குறூப் நிருபர்
No comments:
Post a Comment